541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
       
தேர்ந்துசெய் வஃதே முறை.
542. வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
       
கோனோக்கி வாழுங் குடி.
543. அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
       
நின்றது மன்னவன் கோல்.
544. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
       
னடிதழீஇ நிற்கு முலகு.
545. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
       
பெயலும் விளையுளுந் தொக்கு.
546. வேலன்று வென்றி தருவது மன்னவன்
       
கோலதூஉங் கோடா தெனின்.
547. இறைகாக்கும் வையக மெல்லா மவனை
       
முறைகாக்கும் முட்டாச் செயின்.
548. எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
       
தண்பதத்தாற் றானே கெடும்.
549. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
       
வடுவன்று வேந்தன் றொழில்.
550. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
       
களைகட் டதனொடு நேர்.