அரசியல்

56. கொடுங்கோன்மை

( அரசன் முறையற்ற ஆட்சி செய்தல் )

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேற்கொண்
        டல்லவை செய்தொழுகும் வேந்து.

552. வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
        கோலொடு நின்றா னிரவு.

553. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
        னாடொறு நாடு கெடும்.

554. கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
        சூழாது செய்யு மரசு.

555. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
        செல்வத்தைத் தேய்க்கும் படை.

556. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
        மன்னாவா மன்னர்க் கொளி.

557. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
        னளியின்மை வாழு முயிர்க்கு.

558. இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
        மன்னவன் கோற்கீழ்ப் படின்.

559. முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
        யொல்லாது வானம் பெயல்.

560. ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
        காவலன் காவா னெனின்.