561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
       
லொத்தாங் கொறுப்பது வேந்து.
562. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
       
நீங்காமை வேண்டு பவர்.
563. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
       
னொருவந்த மொல்லைக் கெடும்.
564. இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
       
னுறைகடுகி யொல்லைக் கெடும்.
565. அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
       
பேஎய்கண் டன்ன துடைத்து.
566. கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
       
நீடின்றி யாங்கே கெடும்.
567. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
       
னடுமுரண் டேய்க்கு மரம்.
568. இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
       
சீறிற் சிறுகுந் திரு.
569. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
       
வெருவந்து வெய்து கெடும்.
570. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
       
தில்லை நிலக்குப் பொறை.