571. கண்ணோட்ட மென்னுங் கழிபெருங் காரிகை
       
யுண்மையா னுண்டிவ் வுலகு.
572. கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
       
ருண்மை நிலக்குப் பொறை.
573. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
       
கண்ணோட்ட மில்லாத கண்.
574. உளபோன் முகத்தெவன் செய்யு மளவினாற்
       
கண்ணோட்ட மில்லாத கண்.
575. கண்ணிற் கணிகலங் கண்ணோட்ட மஃதின்றேற்
       
புண்ணென் றுணரப் படும்.
576. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
       
டியைந்துகண் ணோடா தவர்.
577. கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
       
கண்ணோட்ட மின்மையு மில்.
578. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
       
குரிமை யுடைத்திவ் வுலகு.
579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
       
பொறுத்தாற்றும் பண்பே தலை.
580. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
       
நாகரிகம் வேண்டு பவர்.