581. ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
       
தெற்றென்க மன்னவன் கண்.
582. எல்லார்க்கு மெல்லா நிகழ்பவை யெஞ்ஞான்றும்
       
வல்லறிதல் வேந்தன் தொழில்.
583. ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
       
கொற்றங் கொளக்கிடந்த தில்.
584. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
       
கனைவரையு மாராய்வ தொற்று.
585. கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டு
       
முகாஅமை வல்லதே யொற்று.
586. துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
       
தென்செயினுஞ் சோர்வில தொற்று.
587. மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
       
யையப்பா டில்லதே யொற்று.
588. ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
       
ரொற்றினா லொற்றிக் கொளல்.
589. ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
       
சொற்றொக்க தேறப் படும்.
590. சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
       
புறப்படுத்தா னாகு மறை.