591. உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா   		
        
    ருடைய துடையரோ மற்று.				
592. உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை   		
        
    நில்லாது நீங்கி விடும்.				
593. ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க   		
        
    மொருவந்தங்  கைத்துடை யார்.			
594. ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா   		
        
    வூக்க முடையா னுழை.				
595. வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்   		
        
    உள்ளத் தனைய துயர்வு.				
596. உள்ளுவ தெல்லாம் முயர்வுள்ளன் மற்றது   		
        
    தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.			
597. சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்   		
        
    பட்டுப்பா டூன்றுங் களிறு.				
598. உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்து   			
        
    வள்ளிய மென்னுஞ் செருக்கு.			
599. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை   		
        
    வெரூஉம் புலிதாக் குறின்.				
600. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ  தில்லார்   	
        
    மரம்மக்க ளாதலே வேறு.