அரசியல்

61.மடியின்மை

( சோம்பல் இன்மை )

601. குடியென்னுங் குன்றா விளக்க மடியென்னு
        மாசூர மாய்ந்து கெடும்.

602. மடியை மடியா வொழுகல் குடியைக்
        குடியாக வேண்டு பவர்.

603. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
        குடிமடியுந் தன்னினு முந்து.

604. குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
        மாண்ட வுஞற்றி லவர்க்கு.

605. நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
        கெடுநீரார் காமக் கலன்.

606. படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
        மாண்பய னெய்த லரிது.

607. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
        மாண்ட வுஞற்றி லவர்.

608. மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க்
        கடிமை புகுத்தி விடும்.

609. குடியாண்மை யுள்வந்த குற்ற மொருவன்
        மடியாண்மை மாற்றக் கெடும்.

610. மடியிலா மன்னவ னெய்து மடியளந்தான்
        றாஅய தெல்லா மொருங்கு.