611. அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் 		
         
    பெருமை முயற்சி தரும்.				
612. வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை  	
        
    தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.				
613. தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே  	
        
    வேளாண்மை யென்னுஞ் செருக்கு.			
614. தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை  	
        
    வாளாண்மை போலக் கெடும்.			
615. இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர்  	
        
    துன்பந் துடைத்தூன்றுந் தூண்.			
616. முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை  		
        
    யின்மை புகுத்தி விடும்.				
617. மடியுளாண்  மாமுகடி யென்ப மடியிலான்  		
        
    றாளுளா டாமரையி னாள்.				
618. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்  		
        
    தாள்வினை யின்மை பழி.				
619. தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்  		
        
    மெய்வருத்தக் கூலி தரும்.				
620. ஊழையு முப்பக்கங் காண்ப ருலைவின்றித்  		
        
    தாழா துஞற்று பவர்.