621. இடுக்கண் வருங்கா னகுக வதனை   		
        
    யடுத்தூர்வ தஃதொப்ப தில்.				
622. வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா   		
        
    னுள்ளத்தி னுள்ளக் கெடும்.				
623. இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்   		
        
    கிடும்பை படாஅ தவர்.				
624. மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற   		
        
    விடுக்க ணிடர்ப்பா டுடைத்து.			
625. அடுக்கி வரினு மழிவிலா னுற்ற   			
        
    விடுக்க ணிடுக்கட் படும்.				
626. அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்   	
        
    றோம்புத றேற்றா தவர்.				
627. இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்   	
        
    கையாறாக் கொள்ளாதா மேல்.			
628. இன்பம் விழையா னிடும்பை யியல்பென்பான்   	
        
    றுன்ப முறுத லிலன்.				
629. இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட்   	
        
    டுன்ப முறுத லிலன்.				
630. இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்த   		
        
    னொன்னார் விழையுஞ் சிறப்பு.