631. கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
       
மருவினையு மாண்ட தமைச்சு.
632. வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
       
டைந்துடன் மாண்ட தமைச்சு.
633. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
       
பொருத்தலும் வல்ல தமைச்சு.
634. தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
       
சொல்லலும் வல்ல தமைச்சு.
635. அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
       
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
636. மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
       
யாவுள முன்னிற் பவை.
637. செயற்கை யறிந்தக் கடைத்து முலகத்
       
தியற்கை யறிந்து செயல்.
638. அறிகொன் றறியா னெனினு முறுதி
       
யுழையிருந்தான் கூறல் கடன்.
639. பழுதெண்ணு மந்திரியிற் பக்கததுட் டெவ்வோ
       
ரெழுபது கோடி யுறும்.
640. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
       
திறப்பா டெலாஅ தவர்.