அமைச்சியல்

68. வினைசெயல்வகை

( செயல் ஆற்றும் முறை )

671. சூழ்ச்சி முடிவு துணிவெய்த லத்துணிவு
        தாழ்ச்சியுட் டங்குத றீது.

672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
        தூங்காது செய்யும் வினை.

673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற்
        செல்லும்வாய் நோக்கிச் செயல்.

674. வினைபகை யென்றிரண்டி னெச்ச நினையுங்காற்
        றீயெச்சம் போலத் தெறும்.

675. பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்து
        மிருடீர வெண்ணிச் செயல்.

676. முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
        படுபயனும் பார்த்துச் செயல்.

677. செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை
        யுள்ளறிவா னுள்ளங் கொளல்.

678. வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
        யானையால் யானையாத் தற்று.

679. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
        யொட்டாரை யொட்டிக் கொளல்.

680. உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
        கொள்வர் பெரியார்ப் பணிந்து.