691. அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
       
விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
692. மன்னர் விழைப விழையாமை மன்னரான்
       
மன்னிய வாக்கந் தரும்.
693. போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
       
றேற்றுதல் யார்க்கு மரிது.
694. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையு மவித்தொழுக
       
லான்ற பெரியா ரகத்து.
695. எப்பொருளு மோரார் தொடரார்மற் றப்பொருளை
       
விட்டக்காற் கேட்க மறை.
696. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
       
வேண்டுப வேட்பச் சொலல்.
697. வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
       
கேட்பினுஞ் சொல்லா விடல்.
698. இளைய ரினமுறைய ரென்றிகழார் நின்ற
       
வொளியோ டொழுகப் படும்.
699. கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
       
துளக்கற்ற காட்சி யவர்.
700. பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்
       
கெழுதகைமை கேடு தரும்.