அமைச்சியல்

71. குறிப்பறிதல்

( ஒருவரது முகக்குறிப்பால் அவரது மனத்திலிருக்கும் எண்ணத்தை அறிதல் )

701. கூறாமை நோக்ககிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
        மாறாநீர் வையக் கணி.

702. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
        தெய்வத்தோ டொப்பக் கொளல்.

703. குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
        யாது கொடுத்தும் கொளல்.

704. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
        யுறுப்போ ரனையரால் வேறு.

705. குறிப்பிற் குறிப்புணரா வாயி னுறுப்பினு
        ளென்ன பயத்தவோ கண்.

706. அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
        கடுத்தது காட்டும் முகம்.

707. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
        காயினுந் தான்முந் துறும்.

708. முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
        யுற்ற துணர்வார்ப் பெறின்.

709. பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
        வகைமை யுணர்வார்ப் பெறின்.

710. நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
        கண்ணல்ல தில்லை பிற.