711. அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்    	
        
    றொகையறிந்த தூய்மை யவர்.			
712. இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லி   	
        
    னடைதெரிந்த நன்மை யவர்.			
713. அவையறியார் சொல்லன்மேற் கொள்பவர் சொல்லின்   	
        
    வகையறியார் வல்லதூஉ மில்.			
714. ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்   	
        
    வான்சுதை வண்ணங் கொளல்.			
715. நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண்   		
        
    முந்து கிளவாச் செறிவு.				
716. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல   		
        
    மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.			
717. கற்றறிந்தார் கல்வி விளங்குங் கசடறச்   		
        
    சொற்றெரிதல் வல்லா ரகத்து.			
718. உணர்வ துடையார்முற்  சொல்லல் வளர்வதன்   	
        
    பாத்தியு ணீர்சொரிந் தற்று.				
719. புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு   	
        
    னன்கு செலச்சொல்லு வார்.				
720. அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த   		
        
    ரல்லார்முற் கோட்டி கொளல்.