அமைச்சியல்

73. அவையஞ்சாமை

( அவையில் பேச அச்சம் கொள்ளாதிருத்தல் )

721. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
        றொகையறிந்த தூய்மை யவர்.

722. கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
        கற்ற செலச்சொல்லு வார்.

723. பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
        ரவையகத் தஞ்சா தவர்.

724. கற்றார்முற் கற்ற செலச்சொல்லித் தாங்கற்ற
        மிக்காருண் மிக்க கொளல்.

725. ஆற்றின் னளவறிந்து கற்க வவையஞ்சா
        மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

726. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
        னுண்ணவை யஞ்சு பவர்க்கு.

727. பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
        தஞ்சு மவன்கற்ற நூல்.

728. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையு
        ணன்கு செலச்சொல்லா தார்.

729. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்து
        நல்லா ரவையஞ்சு வார்.

730. உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
        கற்ற செலச்சொல்லா தார்.

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
        சூழினுந் தான்முந் துறும்.