கற்பியல்

133. ஊடலுவகை

( தலைவனும் தலைவியும் ஊடி மகிழ்தல் )

1321. இல்லை தவறவர்க் காயினு மூடுதல்
          வல்ல தவரளிக்கு மாறு.

1322. ஊடலிற் தோன்றுஞ் சிறுதுனி நல்லளி
          வாடினும் பாடு பெறும்.

1323. புலத்தலிற் புத்தேணா டுண்டோ நிலத்தொடு
          நீரியைந் தன்னா ரகத்து.

1324. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்
          னுள்ள முடைக்கும் படை.

1325. தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ
          ளகறலி னாங்கொன் றுடைத்து.

1326. உணலினு முண்ட தறலினிது காமம்
          புணர்தலி னூட லினிது.

1327. ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னும்
          கூடலிற் காணப் படும்.

1328. ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
          கூடலிற் றோன்றிய வுப்பு.

1329. ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப்ப
          நீடுக மன்னோ விரா.

1330. ஊடுதல் காமத்திற் கின்ப மதற்கின்பம்
          கூடி முயங்கப் பெறின்.