கற்பியல்

132. புலவி நுணுக்கம்

( ஊடலின் நுட்பம் )

1311. பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
          நண்ணேன் பரத்தநின் மார்பு.

1312. ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
          நீடுவாழ் கென்பாக் கறிந்து.

1313. கோட்டுப்பூச் சூடினுங் காயு மொருத்தியைக்
          காட்டிய சூடினீ ரென்று.

1314. யாரினுங் காதல மென்றேனா வூடினாள்
          யாரினும் யாரினு மென்று.

1315. இம்மைப் பிறப்பிற் பிரியல மென்றேனாக்
          கண்ணிறை நீர்கொண் டனள்.

1316. உள்ளினே னென்றேன்மற் றென்மறந்தீ ரென்றென்னைப்
          புல்லாள் புலத்தக் கனள்.

1317. வழுத்தினா டும்மினே னாக வழித்தழுதாள்
          யாருள்ளித் தும்மினீ ரென்று.

1318. தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள
          லெம்மை மறைத்திரோ வென்று.

1319. தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ
          ரிந்நீர ராகுதி ரென்று.

1320. நினைத்திருந்து நோக்கினுங் காயு மனைத்துநீர்
          யாருள்ளி நோக்கினீ ரென்று.