அமைச்சியல்

66. வினைத்தூய்மை

( செய்யும் வினையை தூய்மையாக செய்தல் )

651. துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
        வேண்டிய வெல்லாந் தரும்.

652. என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
        நன்றி பயவா வினை.

653. ஒஓதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
        யாஅது மென்னு மவர்.

654. இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
        நடுக்கற்ற காட்சி யவர்.

655. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேன்
        மற்றன்ன செய்யாமை நன்று.

656. ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
        சான்றோர் பழிக்கும் வினை.

657. பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
        கழிநல் குரவே தலை.

658. கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா
        முடிந்தாலும் பீழை தரும்.

659. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
        பிற்பயக்கு நற்பா லவை.

660. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
        கலத்துணீர் பெய்திரீஇ யற்று.