அங்கவியல்

75. அரண்

( நாட்டைப் பாதுகாக்கும் அரணின் இலக்கணம் )

741. ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
        போற்று பவர்க்கும் பொருள்.

742. மணிநீரு மண்ணு மலையு மணிநிழற்
        காடு முடைய தரண்.

743. உயர்வகலந் திண்மை யருமையிந் நான்கி
        னமைவர ணென்றுரைக்கு நூல்.

744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
        யூக்க மழிப்ப தரண்.

745. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
        நிலைக்கெளிதா நீர தரண்.

746. எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு
        நல்லா ளுடைய தரண்.

747. முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
        பற்றற் கரிய தரண்.

748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
        பற்றியார் வெல்வ தரண்.

749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
        வீறெய்தி மாண்ட தரண்.

750. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
        யில்லார்க ணில்ல தரண்.