அங்கவியல்

76. பொருள்செயல்வகை

( பொருள் தேடும் முறை )

751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
        பொருளல்ல தில்லை பொருள்.

752. இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
        யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.

753. பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
        மெண்ணிய தேயத்துச் சென்று.

754. அறனீனு மீன்பமு மீனுந் திறனறிந்து
        தீதின்றி வந்த பொருள்.

755. அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
        புல்லார் புரள விடல்.

756. உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
        தெறுபொருளும் வேந்தன் பொருள்.

757. அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
        செல்வச் செவிலியா லுண்டு.

758. குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
        றுண்டாகச் செய்வான் வினை.

759. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
        மெஃகதனிற் கூரிய தில்.

760. ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
        ளேனை யிரண்டு மொருங்கு.