781. செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
       
வினைக்கரிய யாவுள காப்பு.
782. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
       
பின்னீர பேதையார் நட்பு.
783. நவில்றொறு நூனயம் போலும் பயில்றொறும்
       
பண்புடை யாளர் தொடர்பு.
784. நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
       
மேற்சென் றிடித்தற் பொருட்டு.
785. புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
       
னட்பாங் கிழமை தரும்.
786. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
       
தகநக நட்பது நட்பு.
787. அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க
       
ணல்ல லுழப்பதா நட்பு.
788. உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
       
யிடுக்கண் களைவதா நட்பு.
789. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி
       
யொல்லும்வா யூன்று நிலை.
790. இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று
       
புனையினும் புல்லென்னு நட்பு.