அங்கவியல்

80. நட்பாராய்தல்

( ஆராய்ந்து நட்பு கொள்ளும் முறை )

791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
        வீடில்லை நட்பாள் பவர்க்கு.

792. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
        தான்சாந் துயரந் தரும்.

793. குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
        வினனு மறிந்தியாக்க நட்பு.

794. குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
        கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு.

795. அழச்சொல்லி யல்ல திடித்து வழக்கறிய
        வல்லார்நட் பாய்ந்து கொளல்.

796. கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
        நீட்டி அளப்பதோர் கோல்.

797. ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
        கேண்மை யொரீஇ விடல்.

798. உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க
        வல்லற்க ணாற்றறுப்பார் நட்பு.

799. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை யடுங்காலை
        யுள்ளினு முள்ளஞ் சுடும்.

800. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
        மொருவுக வொப்பிலார் நட்பு.