அங்கவியல்

81. பழைமை

( பழகிய நண்பர்களின் அன்பை மதித்தல் )

801. பழைமை யெனப்படுவ தியாதெனின் யாதுங்
        கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

802. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்
        குப்பாதல் சான்றோர் கடன்.

803. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
        செய்தாங் கமையாக் கடை.

804. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
        கேளாது நட்டார் செயின்.

805. பேதைமை யொன்றோ பெருங்கிழமை யென்றுணர்க
        நோதக்க நட்டார் செயின்.

806. எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந்
        தொல்லைக்க ணின்றார் தொடர்பு.

807. அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
        வழிவந்த கேண்மை யவர்.

808. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
        நாளிழுக்க நட்டார் செயின்.

809. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
        விடாஅர் விழையு முலகு.

810. விழையார் விழையப் படுப பழையார்கட்
        பண்பிற் றலைப்பிரியா தார்.