அங்கவியல்

82. தீ நட்பு

( தீயவரின் நட்பின் தன்மை )

811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
        பெருகலிற் குன்ற லினிது.

812. உறினட் டறின்னொரூஉ மொப்பிலார் கேண்மை
        பெறினு மிழப்பினு மென்.

813. உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
        கொள்வாருங் கள்வரு நேர்.

814. அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
        தமரிற் றனிமை தலை.

815. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
        யெய்தலி னெய்தாமை நன்று.

816. பேதை பெருங்கெழீஇ நட்பி னறிவுடையா
        ரேதின்மை கோடி யுறும்.

817. நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
        பத்தடுத்த கோடி யுறும்.

818. ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை
        சொல்லாடார் சோர விடல்.

819. கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
        சொல்வேறு பட்டார் தொடர்பு.

820. எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
        மன்றிற் பழிப்பார் தொடர்பு.