அங்கவியல்

84. பேதைமை

( யாதும் அறியாத தன்மை )

831. பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
        டூதியம் போக விடல்.

832. பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
        கையல்ல தன்கட் செயல்.

833. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
        பேணாமை பேதை தொழில்.

834. ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
        பேதையிற் பேதையா ரில்.

835. ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
        தான்புக் கழுந்து மளறு.

836. பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
        பேதை வினைமேற் கொளின்.

837. ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
        பெருஞ்செல்வ முற்றக் கடை.

838. மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
        கையொன் றுடைமை பெறின்.

839. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
        பீழை தருவதொன் றில்.

840. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
        குழாஅத்துப் பேதை புகல்.