அங்கவியல்

86. இகல்

( மாறுபடுதல் )

851. இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
        பண்பின்மை பாரிக்கு நோய்.

852. பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
        யின்னாசெய் யாமை தலை.

853. இகலென்னு மெவ்வநோய் நீக்கிற் றவலில்லாத்
        தாவில் விளக்கந் தரும்.

854. இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்
        துன்பத்துட் டுன்பங் கெடின்.

855. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
        மிகலூக்கும் தன்மை யவர்.

856. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
        தவலுங் கெடலு நணித்து.

857. மிகன்மேவன் மெய்ப்பொருள் காணா ரிகன்மேவ
        வின்னா வறிவி னவர்.

858. இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
        மிகலூக்கி னூக்குமாங் கேடு.

859. இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
        மிகல்காணுங் கேடு தரற்கு.

860. இகலானா மின்னாத வெல்லா நகலானா
        நன்னய மென்னுஞ் செருக்கு.