அங்கவியல்

87. பகைமாட்சி

( பகைவனை பெருமைக்குரியவனாக்கும் தன்மை )

861. வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
        மெலியார்மேன் மேக பகை.

862. அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
        னென்பரியு மேதிலான் றுப்பு.

863. அஞ்சு மறியா னமைவில னீகலான்
        றஞ்ச மெளியன் பகைக்கு.

864. நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
        யாங்கணும் யார்க்கு மெளிது.

865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
        பண்பிலன் பற்றார்க் கினிது.

866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
        பேணாமை பேணப் படும்.

867. கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற வடுத்திருந்து
        மாணாத செய்வான் பகை.

868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
        கினனிலனா மேமாப் புடைத்து.

869. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
        வஞ்சும் பகைவர்ப் பெறின்.

870. கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று
        மொல்லானை யொல்லா தொளி.