அங்கவியல்

89. உட்பகை

( புறத்தே நட்பு கொண்டு மனத்தில் பகை வளர்த்தல் )

881. நிழனீரு மின்னாத வின்னா தமர்நீரு
        மின்னாவா மின்னா செயின்.

882. வாள்போல பகைவரை யஞ்சற்க வஞ்சுக
        கேள்போல் பகைவர் தொடர்பு.

883. உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
        மட்பகையின் மாணத் தெறும்.

884. மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
        வேதம் பலவுந் தரும்.

885. உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா
        னேதம் பலவும் தரும்.

886. ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
        பொன்றாமை யொன்ற லரிது.

887. செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
        யுட்பகை யுற்ற குடி.

888. அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
        துட்பகை யுற்ற குடி.

889. எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
        முட்பகை யுள்ளதாங் கேடு.

890. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
        பாம்போ டுடனுறைந் தற்று.