அங்கவியல்

91. பெண்வழிச்சேறல்

( மனைவிக்கு அஞ்சி அவள் சொற்படி நடத்தல் )

901. மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழையார்
        வேண்டாப் பொருளு மது.

902. பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
        நாணாக நாணுத் தரும்.

903. இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று
        நல்லாரு ணாணுத் தரும்.

904. மனையாளை யஞ்சு மறுமையி லாளன்
        வினையாண்மை வீறெய்த லின்று.

905. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
        நல்லார்க்கு நல்ல செயல்.

906. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
        ளமையார்தோ ளஞ்சு பவர்.

907. பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
        பெண்ணே பெருமை யுடைத்து.

908. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
        பெட்டாங் கொழுகு பவர்.

909. அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
        பெண்ணேவல் செய்வார்க ணில்.

910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
        பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.