அங்கவியல்

92. வரைவின்மகளிர்

( பொதுமகளிர் இயல்பு )

911. அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா
        ரின்சொ லிழுக்குத் தரும்.

912. பயன்றூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
        நயன்றூக்கி நள்ளா விடல்.

913. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
        லேதில் பிணந்தழீஇ யற்று.

914. பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
        ளாயு மறிவி னவர்.

915. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
        மாண்ட வறிவி னவர்.

916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
        புன்னலம் பாரிப்பார் தோள்.

917. நிறைநெஞ்ச மில்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
        பேணிப் புணர்பவர் தோள்.

918. ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப
        மாய மகளிர் முயக்கு.

919. வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்
        பூரியர்க ளாழு மளறு.

920. இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
        திருநீக்கப் பட்டார் தொடர்பு.