அங்கவியல்

95. மருந்து

( நோய் நீக்கும் வழிமுறை )

941. மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
        வளிமுதலா வெண்ணிய மூன்று.

942. மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
        தற்றது போற்றி யுணின்.

943. அற்றா லறவறிந் துண்க வஃதுடம்பு
        பெற்றா னெடிதுய்க்கு மாறு.

944. அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
        துய்க்க துவரப் பசித்து.

945. மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
        னூறுபா டில்லை யுயிர்க்கு.

946. இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்கும்
        கழிபே ரிரையான்க ணோய்.

947. தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
        நோயள வின்றிப் படும்.

948. நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
        வாய்நாடி வாய்ப்பச் செயல்.

949. உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
        கற்றான் கருதிச் செயல்.

950. உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
        றப்பானாற் கூற்றே மருந்து.