அங்கவியல்

98. பெருமை

( பெருமை உடையோரின் மாண்பு )

971. ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
        கஃதிறந்து வாழ்து மெனல்.

972. பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
        செய்தொழில் வேற்றுமை யான்.

973. மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
        கீழல்லார் கீழல் லவர்.

974. ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
        தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.

975. பெருமை யுடையவ ராற்றுவா ராற்றி
        னருமை யுடைய செயல்.

976. சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
        பேணிக்கொள் வேமென்னு நோக்கு.

977. இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
        சீரல் லவர்கட் படின்.

978. பணியுமா மென்றும் பெருமை சிறுமை
        அணியுமாந் தன்னை வியந்து.

979. பெருமை பெருமித மின்மை சிறுமை
        பெருமித மூர்ந்து விடல்.

980. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
        குற்றமே கூறி விடும்.