அங்கவியல்

100. பண்புடைமை

( நற்பண்புகளுடன் வாழ்தல் )

  991. எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
          பண்புடைமை யென்னும் வழக்கு.

  992. அன்புடைமை யான்ற குடிப்பிறத்த லிவ்விரண்டும்
          பண்புடைமை யென்னும் வழக்கு.

  993. உறுப்பொத்தன் மக்களொப் பன்றால் வெறுத்தக்க
          பண்பொத்த லொப்பதா மொப்பு.

  994. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
          பண்புபா ராட்டு முலகு.

  995. நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
          பண்புள பாடறிவார் மாட்டு.

  996. பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன்
          மண்புக்கு மாய்வது மன்.

  997. அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர்
          மக்கட்பண் பில்லா தவர்.

  998. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
          பண்பாற்றா ராதல் கடை.

  999. நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
          பகலும்பாற் பட்டன் றிருள்.

1000. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்
          கலந்தீமை யாற்திரிந் தற்று.