அங்கவியல்

102. நாணுடைமை

( பழி தரும் செயல்களை செய்ய நாணுதல் )

1011. கருமத்தா னாணுத னாணுந் திருநுத
          னல்லவர் நாணுப் பிற.

1012. ஊணுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல
          நாணுடைமை மாந்தர் சிறப்பு.

1013. ஊனைக் குறித்த வுயிரெல்லா நாண்னென்னு
          நன்மை குறித்தது சால்பு.

1014. அணியன்றோ நாணுடைமை சான்றோர்க் கஃதின்றேற்
          பிணியன்றோ பீடு நடை.

1015. பிறர்பழியுந் தம்பழியு நாணுவார் நாணுக்
          குறைபதி யென்னு முலகு.

1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
          பேணலர் மேலா யவர்.

1017. நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா
          னாண்டுறவார் நாணாள் பவர்.

1018. பிறர்நாணத் தக்கது தானாணா னாயி
          னறநாணத் தக்க துடைத்து.

1019. குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு
          நாணின்மை நின்றக் கடை.

1020. நாணகத் தில்லா ரியக்க மரப்பாவை
          நாணா லுயிர்மருட்டி யற்று.