அங்கவியல்

107. இரவச்சம்

( பிறரிடம் யாசிக்க விரும்பாமை )

1061. கரவா துவந்தீயுங்ட் கண்ணனார் கண்ணு
          மிரவாமை கோடி யுறும்.

1062. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
          கெடுக வுலகியற்றி யான்.

1063. இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
          வன்மையின் வன்பாட்ட தில்.

1064. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடமில்லாக்
          காலு மிரவொல்லாச் சால்பு.

1065. தெண்ணீ ரடுபுற்கை யாயினுந் தாடந்த
          துண்ணலி னூங்கினிய தில்.

1066. ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்
          கிரவி னிளிவந்த தில்.

1067. இரப்ப னிரப்பாரை யெல்லா மிரப்பிற்
          கரப்பா ரிரவன்மி னென்று.

1068. இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்
          பார்தாக்கப் பக்கு விடும்.

1069. இரவுள்ள வுள்ள முருகுங் கரவுள்ள
          வுள்ளதூஉ மின்றிக் கெடும்.

1070. கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பவர்
          சொல்லாடப் போஒ முயிர்.