அங்கவியல்

108. கயமை

( நற்பண்புகளற்ற கீழோரின் தன்மை )

1071. மக்களே போல்வர் கயவ ரவரன்ன
          வொப்பாரி யாங்கண்ட தில்.

1072. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
          நெஞ்சத் தவல மிலர்.

1073. தேவ ரனையர் கயவ ரவருந்தா
          மேவன செய்தொழுக லான்.

1074. அகப்பட்டி யாவாரைக் காணி னவரின்
          மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்.

1075. அச்சமே கீழ்கள தாசார மெச்ச
          மவாவுண்டே லுண்டாஞ் சிறிது.

1076. அறைபறை யன்னர் கயவர்தாங் கேட்ட
          மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்
          கூன்கைய ரல்லா தவர்க்கு.

1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
          கொல்லப் பயன்படுங் கீழ்.

1079. உடுப்பதூஉ முண்பதூஉங் காணிற் பிறர்மேல்
          வடுக்காண வற்றாகுங் கீழ்.

1080. எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்
          விற்றற் குரியர் விரைந்து.

380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
        சூழினுந் தான்முந் துறும்.