களவியல்

115. அலரறிவுறுத்தல்

( காதலைப்பற்றி பலரும் பேசுதல் )

1141. அலரெழ வாருயிர் நிற்கு மதனைப்
          பலரறியார் பாக்கியத் தால்.

1142. மலரன்ன கண்ணா ளருமை யறியா
          தலரெமக் கீந்ததிவ் வூர்.

1143. உறாஅதோ வூரறிந்த கெளவை யதனைப்
          பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

1144. கவ்வையாற் கவ்விது காம மதுவின்றேற்
          றவ்வென்னுந் தன்மை யிழந்து.

1145. களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம்
          வெளிப்படுந் தோறு மினிது.

1146. கண்டது மன்னு மொருநா ளலர்மன்னுந்
          திங்களைப் பாம்புகொண் டற்று.

1147. ஊரவர் கெளவை யெருவாக வன்னைசொன்
          னீராக நீளும்மிந் நோய்.

1148. நெய்யா லெரிநுதுப்பே மென்றற்றாற் கெளவையாற்
          காம நுதுப்பே மெனல்.

1149. அலர்நாண வொல்வதோ வஞ்சலோம் பென்றார்
          பலர்நாண நீத்தக் கடை.

1150. தாம்வேண்டி னல்குவர் காதலர் யாம்வேண்டுங்
          கெளவை யெடுக்குமிவ் வூர்.