கற்பியல்

116. பிரிவாற்றாமை

( தலைவி தலைவன் பிரிவிற்கு வருந்துதல் )

1151. செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
          வல்வரவு வாழ்வார்க் குரை.

1152. இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
          புன்க ணுடைத்தால் புணர்வு.

1153. அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும்
          பிரிவோ ரிடத்துண்மை யான்.

1154. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
          றேறியார்க் குண்டோ தவறு.

1155. ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர்
          நீங்கி னரிதால் புணர்வு.

1156. பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர்
          நல்குவ ரென்னும் நசை.

1157. துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை
          யிறையிறவா நின்ற வளை.

1158. இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு
          யின்னா தினியார்ப் பிரிவு.

1159. தொடிற்சுடி னல்லது காமநோய் போல
          விடிற்சுட லாற்றுமோ தீ.

1160. அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப்
          பின்னிருந்து வாழ்வார் பலர்.