கற்பியல்

118. கண்விதுப்பழிதல்

( தலைவனைக் காணாது தலைவியின் கண்கள் வருந்துதல் )

1171. கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
          தாங்காட்ட யாம்கண் டது.

1172. தெரிந்துணரா நோக்கிய வுண்கண் பரிந்துணராப்
          பைத லுழப்ப தெவன்.

1173. கதுமெனத் தானோக்கித் தாமே கலுழு
          மிதுநகத் தக்க துடைத்து.

1174. பெயலாற்றா நீருலந்த வுண்க ணுயலாற்றா
          வுய்வினோ யென்க ணிறுத்து.

1175. படலாற்றா பைத லுழக்குங் கடலாற்றாக்
          காமநோய் செய்தவென் கண்.

1176. ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண்
          டாஅ மிதற்பட் டது.

1177. உழந்துழந் துண்ணீ ரறுக விழைந்திழைந்து
          வேண்டி யவர்க்கண்ட கண்.

1178. பேணாது பெட்டா ருளர்மன்னோ மற்றவர்க்
          காணா தமைவில கண்.

1179. வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா வாயிடை
          யாரஞ ருற்றன கண்.

1180. மறைபெற லூரார்க் கரிதன்றா லெம்போ
          லறைபறை கண்ணா ரகத்து.