கற்பியல்

119. பசப்புறுபருவரல்

( பிரிவால் பசலை பரவத் தலைவி வருந்துதல் )

1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
          பண்பியார்க் குரைக்கோ பிற.

1182. அவர்தந்தா ரென்னுந் தகையா லிவர்தந்தென்
          மேனிமே லூரும் பசப்பு.

1183. சாயலும் நாணு மவர்கொண்டார் கைம்மாறா
          நோயும் பசலையுந் தந்து.

1184. உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற்
          கள்ளம் பிறவோ பசப்பு.

1185. உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
          மேனி பசப்பூர் வது.

1186. விளக்கற்றம் பார்க்கு மிருளேபோற் கொண்கன்
          முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

1187. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தே னவ்வளவி
          லள்ளிக்கொள் வற்றே பசப்பு.

1188. பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத்
          துறந்தா ரவரென்பா ரில்.

1189. பசக்கமற் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
          நன்னிலைய ராவ ரெனின்.

1190. பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
          நல்காமை தூற்றா ரெனின்.