கற்பியல்

122. கனவுநிலையுரைத்தல்

( தான் கண்ட கனவை தலைவி கூறுதல் )

1211. காதலர் தூதொடு வந்த கனவினுக்
          கியாதுசெய் வேன்கொல் விருந்து.

1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
          குயலுண்மை சாற்றுவேன் மன்.

1213. நனவினா னல்கா தவரைக் கனவினாற்
          காண்டலி னுண்டென் னுயிர்.

1214. கனவினா னுண்டாகுங் காம நனவினா
          னல்காரை நாடித் தரற்கு.

1215. நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
          கண்ட பொழுதே யினிது.

1216. நனவென வொன்றில்லை யாயிற் கனவினாற்
          காதலர் நீங்கலர் மன்.

1217. நனவினா னல்காக் கொடியார் கனவனா
          னென்னெம்மைப் பீழிப் பது.

1218. துஞ்சுங்காற் றோள்மேல ராகி விழிக்குங்கா
          நெஞ்சத்த ராவர் விரைந்து.

1219. நனவினா னல்காரை நோவர் கனவினாற்
          காதலர்க் காணா தவர்.

1220. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்
          காணார்கொ லிவ்வூ ரவர்.