கற்பியல்

127. அவர்வயின் விதும்பல்

( தலைவனின் வரவை எதிர்நோக்கித் தலைவியின் மனம் விரைதல் )

1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணு மவர்சென்ற
          நாளொற்றித் தேய்ந்த விரல்.

1262. இலங்கிழா யின்று மறப்பினென் றோண்மேற்
          கலங்கழியுங் காரிகை நீத்து.

1263. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
          வரனசைஇ யின்னு முளேன்.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
          கோடுகொ டேறுமென் னெஞ்சு.

1265. காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபி
          னீங்குமென் மென்றோட் பசப்பு.

1266. வருகமற் கொண்க னொருநாட் பருகுவன்
          பைதனோ யெல்லாங்க் கெட.

1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
          கண்ணன்ன கேளிர் வரின்.

1268. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
          மாலை யயர்கம் விருந்து.

1269. ஒருநா ளெழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்
          வருநாள்வைத் தேங்கு பவர்க்கு.

1270. பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னா
          முள்ள முடைந்துக்கக் கால்.