கற்பியல்

128. குறிப்பறிவுறுத்தல்

( தலைவி தன் மன உணர்வை குறிப்பால் தலைவனுக்கு அறிவுறுத்தல் )

1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
          ணுரைக்க லுறுவதொன் றுண்டு.

1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
          பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

1273. மணியிற் திகழ்தரு நூல்போன் மடந்தை
          யணியிற் திகழ்வதொன் றுண்டு.

1274. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
          நகைமொக்கு ளுள்ளதொன் றுண்டு.

1275. செறிதொடி செய்திறந்த கள்ள முறுதுயர்
          தீர்க்கு மருந்தொன் றுடைத்து.

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி
          யன்பின்மை சூழ்வ துடைத்து.

1277. தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினு
          முன்ன முணர்ந்த வளை.

1278. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
          மெழுநாளே மேனி பசந்து.

1279. தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி
          யஃதாண் டவள்செய் தது.

1280. பெண்ணினாற் பெண்மை யுடைத்தென்ப கண்ணினாற்
          காமநோய் சொல்லி யிரவு.